பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்
காலி கினிமெல்லேகஹா பிரதேசத்தில், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்த முயற்சித்த நபர் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சட்டவிரோத மதுபானம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் வீடொன்றில் சுற்றி வளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது வீட்டிலிருந்த நபர் பொலிஸாரை தாக்க முயற்சித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
தெலிகட பிரதேச பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த நபருக்கு உயிராபத்து கிடையாது என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
30 வயதான நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
