அன்புள்ள மங்களவுக்கு! முன்னாள் ஜனாதிபதியின் பாசமிகு கடிதம்
அன்புள்ள மங்கள, நம் நாட்டில் தற்போது அதிகளவிலான மக்களை பாதிக்கும் கொரோனா நோயினால் நீங்களும் அவதியுறுவது மிக வேதனையானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் நிதி மங்கள சமரவீர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இது தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டு தனது வருத்தங்களை தெரிவித்துள்ளார்.
நீங்கள் கொரோனா தொற்றுக்குள்ளானமை குறித்து நான் மிகுந்த வேதனை அடைகின்றேன். தற்போது நீங்கள் தற்போது நாளுக்கு நாள் குணமடைந்து வருவதைக் கேட்டு நான் நிம்மதியாக இருக்கின்றேன்.
நீங்கள் மிகவும் விசுவாசமான, கொள்கை ரீதியான அரசியல் நண்பராகவும், பேரழிவின் போது கைவிடாத நல்ல நண்பராகவும் இருக்கிறீர்கள்.
எங்கள் அன்புக்குரிய மக்களுக்கான சிறந்த நாட்டை கட்டியெழுப்ப நீங்கள் விரைவில் குணமடைந்து வருவீர்கள் என நான் நம்புகின்றேன் என அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.