கோவிட் தொற்றிலிருந்து உயிர் காப்போம்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு
கோவிட் வைரஸ் பெருந்தொற்று காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ் உறவுகளின் மருத்துவ தேவைகளுக்கு உதவிடுமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
ஈழத்தமிழர்கள், தமிழ் நாட்டு தமிழர்கள் பலரும் மருத்துவ தேவைகளுக்கான நெருக்கடியை மட்டுமல்ல, வாழ்வாதார நெருக்கடியினையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
தமிழர் தாயகத்தில் இருந்து உதவிகோரல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தமிழ் நாட்டின் நிலவரங்களுக்கமைய தமிழ் நாட்டு அரசின் சார்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகத்தமிழர்களிடம் நன்கொடையினை கோரியிருந்தார்.
இந்நிலையில் தமிழ் உறவுகளின் 'உயிர்காக்க இன்றே உதவிடுவோம்' என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதோடு, இணையவழியூடாக சிறுதுளி பெருவெள்ளமாய் பங்களிப்பினை செய்யும் வகையில் ஏற்பாட்டைச் செய்துள்ளது. https://www.gofundme.com/f/tgte-covid19-medical-relief-for-tamils இந்த இணைப்பின் மூலம் உதவிட முடியும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை தெரிவித்துள்ளது.
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan