கடந்த காலங்களை படிப்பினையாக கொள்ள வேண்டும் - சிவனேசதுரை சந்திரகாந்தன்
இந்த மண்ணில் ஏற்பட்ட விடயங்களையும், கடந்த காலத்தையும் படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட கணேசபுரம் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட ஒரு கிலோ மீற்றர் வீதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உலகத்தில் ஏற்படுகின்ற சவால்களை வெல்லக் கூடிய சூழலுக்கு ஏற்ப பாடசாலைகளை நாம் கட்டியெழுப்பவில்லை. இது இப்பகுதியில் மாத்திரமல்ல. பல இடங்களில் உள்ளன.
எனவே, இந்தக் கிராமத்தின் தேவைகளும், நிதிப்பாய்ச்சலும் அதிகமாக உள்ளது
என்பதை நான் உணர்கின்றேன்.
கல்விதான் உலலகளாவிய ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட விடயங்கள் ஒரு வரலாறாகும். இந்த மண்ணிலே ஏற்பட்ட விடயங்களையும், கடந்த காலத்தையும் நாம் படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |