அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை! முன்வைக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்
அதிகரிக்கும் மரக்கறிகளின் விலையை கட்டுப்படுத்த கிராமப்புறங்களில் பயிரிடப்படும் பலா, பேரீச்சம்பழம், கொஹில, வாழை, போன்ற பயிர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என புதிய தீர்மானம் ஒன்றை தேசிய நுகர்வோர் முன்னணி முன்வைத்துள்ளது.
தேசிய நுகர்வோர் சபை இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே இவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
மரக்கறிகளின் விலை
இதன்படி, இந்த கிராமிய பயிர்களை உள்ளூர் மட்டத்தில் சேகரித்து பிரதான பொருளாதார நிலையங்களுக்கு வழங்குவதன் மூலம் மரக்கறிகளின் விலையை கட்டுப்படுத்த முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் கிராமப்புற சூழலில் அதிகளவில் விளையும் எலுமிச்சையை அறிமுகப்படுத்தியவுடன் சுமார் 2000 ரூபாய் மதிப்பிலான தேசிக்காயின் விலையை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.