சித்திரவதை தொடர்பில் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டத்திருத்தம்
சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அல்லது சித்திரவதை செய்ய முயற்சித்தவர்கள் தொடர்பில் விரைவில் நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த திருத்தத்தின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்படுவோருக்கு சிறைத் தண்டனையுடன் கூடுதலாக அபராதமும் விதிக்கப்படவுள்ளது.
அதன்படி, குற்றவாளிகள் எனக் கருதப்படுபவர்களுக்கு சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற தண்டனைச் சட்டத்தின் திருத்தத்தின் கீழ் தற்போதுள்ள 5-7 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் 50,000 ரூபா முதல் 200,000 ரூபா வரையான அபராதம் விதிக்கப்படும்.
தற்போது இந்த அபராதம் 10,000ரூபா முதல் 50,000 ரூபா வரை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த சட்டத் திருத்தத்தின்படி சித்திரவதை என்பது பிணை அனுமதி வழங்கப்படாத குற்றமாகும்.
அத்துடன் ஒரு மேல் நீதிமன்றத்திற்கு மட்டுமே அந்தக் குற்றத்தை
விசாரணை செய்யும் அதிகாரம் உள்ளது.
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri