சஜித்-ரணில் கூட்டணி - நளிந்த ஜயதிஸ்ஸ விசனம்
சஜித்-ரணில் கூட்டணி என்பது ஒரு கூட்டணி அல்ல ரணில் விக்ரமசிங்க தலைவராகி, சஜித்தை தனது ஆதரவாளராக்கப் பார்க்கும் ஒரு முயற்சி என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாம் பொறுப்பேற்றது பொருளாதார ரீதியாகப் பலவீனப்பட்டு, அழிக்கப்பட்டு, ஸ்தம்பித்துப் போய் இருந்த ஒரு நாட்டை ஆகும்.
2024 செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் பொருளாதாரம் மிகச் சிறந்த நிலையில் இயங்கவில்லை. நாம் பொருளாதாரத்தை ஒரு நிலைக்குக் கொண்டுவந்துள்ளோம், சீரமைத்துள்ளோம்.

அதேபோல கடந்த நவம்பர் மாதத்தில் 'டித்வா' சூறாவளி வந்து எமது நாட்டின் மக்கள் தொகையில் 11 சதவீதமானோர் பாதிப்புக்கு உள்ளானார்கள். அதற்குப் பிறகு மத்திய கிழக்கில் ஏற்பட்ட அச்சுறுத்தல் இன்னமும் முழுமையாக முடியடையவில்லை.
அப்படி இருந்தும், உலக நாடுகள் இயற்கை பேரிடர்களினாலும் மத்திய கிழக்கு அச்சுறுத்தல்களினாலும் மக்கள் மீது பல்வேறு பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், நாம் எந்தவொரு பொருளாதாரக் கட்டுப்பாடுகளும் இன்றி நாட்டை ஒரு நிலைக்குக் கொண்டுவந்துள்ளோம்.
சர்வதேச அமைப்புகளின் புள்ளிவிபரம்
அது மத்திய வங்கியின் அல்லது சர்வதேச அமைப்புகளின் புள்ளிவிவரங்களில் மட்டுமன்றி, மக்களின் வாழ்க்கையிலும் உணரக்கூடிய அளவிற்குப் பொருளாதாரத்தை நாம் மேம்படுத்தியுள்ளோம்.
இப்போது இருப்பது நாட்டைப் பலப்படுத்துவதே ஆகும். இப்போது எந்தவொரு நிறுவனத்திற்கும், அமைப்பிற்கும், தனிநபருக்கும், தொழிலதிபருக்கும் தெளிவாகத் தங்கள் பொருளாதார இலக்குகளுக்கு ஏற்பப் பணிகளைத் தொடங்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இதைத்தான் நாம் நாட்டிற்குச் செய்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கிறோம். இதில் பிரதேசம், இனம், மதம், தொழில் போன்றவை கவனத்தில் கொள்ளப்படாமல், ஒட்டுமொத்தமாக பொருளாதாரத்தின் கருவூலத்தைப் பலப்படுத்தும் அதேவேளையில், அதன் பலன்கள் மக்களுக்குச் சென்று சேர வழிவகை செய்யப்பட்டது.
இது
எமது இறுதி இலக்கு அல்ல, இன்னும் செல்ல வேண்டிய தூரம் உள்ளது. எனினும்,
செல்லும் பாதையில் நாம் படிப்படியாக முன்னேறி வருகிறோம்.
சட்ட மறுசீரமைப்பு
மக்களின் வாழ்க்கையில் ஒரு சுலபமான நிலை உணரப்படுகின்றது. நாம் எந்தவொரு குறிப்பிட்ட வழியையும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், இப்போது நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பது அனைவருக்கும் புரிகின்றது.
"உங்களால் பார்க்க முடியும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மிக விரைவாக இரத்து செய்யப்படும். அது தொடர்பான பணிகள் இப்போது இறுதி கட்டத்தில் உள்ளன.

சட்ட மறுசீரமைப்பு அல்லது ஒரு சட்டத்தை இரத்து செய்வது என்பது பேனா முனையினால் உடனே செய்துவிடக் கூடிய விடயம் அல்ல.
இதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் இதையெல்லாம் செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு வேறு தவறான காரியங்களைச் செய்துகொண்டிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ஜிபி முத்து மீது தாக்குதல்.. வீட்டின் முன் மாந்திரீக பூஜை, தட்டி கேட்டதால் தாக்குதல் Cineulagam