பயங்கரவாதத்தை மக்கள் மீது திணிக்க பொலிஸார் முயற்சி: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Sri Lanka Police Batticaloa Gajendrakumar Ponnambalam Sri Lanka Police Investigation
By Bavan Dec 01, 2023 01:02 PM GMT
Report

மட்டக்களப்பில் மாவீரர் தின நினைவேந்தலை ஒழுங்கு செய்தவர்களில் 10 பேரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்த பொலிஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை இன்று (01.12.2023) மட்டு சிறைச்சாலைக்கு சென்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இத தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த மாதம் 25 மற்றும் 27 ம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த இருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் செயற்பாடுகள் 

அரசாங்கம் மாவீரர் தின நினைவேந்தலை நினைவு கூருவதற்கு அனுமதி வழங்கியபோதும், வடக்கு கிழக்கிலே மூதூர்,சம்பூரை தவிர அனைத்து நீதிமன்றங்களிலும் தடை உத்தரவு பெறுவதற்கு பொலிஸார் முயற்சி எடுத்துள்ளனர்.

பயங்கரவாதத்தை மக்கள் மீது திணிக்க பொலிஸார் முயற்சி: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Legal Action Against The Police Who Impose Tamils

குறித்த நீதிமன்றங்கள் நினைவு கூருவதற்கு உரிமை உண்டு என தீர்ப்பு வழங்கிய அதேவேளை, தமிழீழ விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற வகையில், அந்த அமைப்பின் சின்னங்கள் இல்லாமல் நினைவேந்தல்கள் நடைபெறமுடியும் என கட்டளை பிறப்பித்தது.

இந்நிலையில் நினைவேந்தலில் கலந்துகொண்டு அதனை ஒழுங்கு செய்த ஒரே ஒரு காரணத்திற்காக இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைதுகள் அரசியல் காரணங்களுக்காக செய்யப்பட்டுள்ளதாக இருக்கின்றதே தவிர சட்ட காரணங்களுக்காக அல்ல என்பது மிக அப்பட்டமாக தெரிகின்றது.

சட்ட ரீதியான நடவடிக்கை

அந்த வகையில் நாங்கள் கைது செய்யப்பட்ட அனைவரையும் சந்தித்து பேசிய போது அவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளிவைக்கின்ற ரீதியில் மேலதிகமான சட்ட நடவடிக்கை வேண்டும் என்றனர்.

பயங்கரவாதத்தை மக்கள் மீது திணிக்க பொலிஸார் முயற்சி: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Legal Action Against The Police Who Impose Tamils

எனவே பொலிஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம்.

தமிழ் மக்கள், இந்த நியாயமற்ற பயங்கரவாத தடைச் சட்டத்தை அறிந்து நடந்து கொண்ட போதும் அவர்கள் குறிவைக்கப்படுகின்றார்கள்.

இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடுமையாக எதிர்ப்பதோடு இந்த பயங்கரவாதத்தை மக்கள் மீது திணிக்கின்ற செயற்பாடுகளுக்கு அடிபணியாது தமிழ் மக்கள் இதை எதிர் நோக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்” என குறிப்பிட்டார். 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US