அரிசியை பதுக்கிய வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை
குருநாகல் பகுதியில் அரிசியை வைத்துக்கொண்டே விற்பனைக்கு இல்லை என கூறிய அரிசி விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த வியாபாரிக்கு எதிராக நேற்றையதினம்(21.02.2025) நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் அதிகார சபையின் குருநாகல் மாவட்ட அதிகாரிகள் இப்பாகமுவ பிரதேசத்தில் மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த அரிசி வியாபாரியின் மோசடி நடவடிக்கை அம்பலமாகியுள்ளது.
10,000 ரூபா அபராதம்
இதனையடுத்து, வியாபாரி தனது தவறை ஒப்புக்கொண்டதையடுத்து, 3 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள 237 கீரி சம்பா அரிசி பொதிகளை அரசுடைமையாக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, நீதிமன்றம் வியாபாரிக்கு 10,000 ரூபா அபராதத்தையும் விதித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |