வெளிப்படுத்தல் உறுதி மோசடி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! சசிதேவி ஜலதீபன்

Anura Kumara Dissanayaka Nothern Province Crime Branch Criminal Investigation Department Crime Nagalingam Vedanayagam
By Theepan Jun 25, 2026 11:21 AM GMT
Report

வட மாகாணத்தில் 'வெளிப்படுத்தல் உறுதி' ஊடாக இடம்பெறும் காணி மோசடிகளைத் தடுக்கும் வகையில், நொத்தாரிசு சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத்திருத்தங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டவரைஞர் திணைக்களங்களுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவாளர் நாயகம்  சசிதேவி ஜலதீபன் உறுதியளித்துள்ளார்.

வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் விசேட அழைப்பின் பேரில், பதிவாளர் நாயகத்துடனான உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று(24.06.2026) நடைபெற்றுள்ளது.

இதன் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கங்கள்..! 32 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் படுகாயம்

அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கங்கள்..! 32 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் படுகாயம்

காணிப் பதிவுகள்

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் 160 ஆண்டுகால வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாகப் பதவியேற்றுள்ள  சசிதேவி ஜலதீபனுக்கு ஆளுநர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து இந்தக் கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் வெளிப்படுத்தல் உறுதி தொடர்பான மோசடிகள் தொடர்பில் ஆளுநர் பல முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

வெளிப்படுத்தல் உறுதி மோசடி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! சசிதேவி ஜலதீபன் | Legal Action Affidavit Fraud Sasidevi Jalatheepan

வெளிப்படுத்தல் உறுதி ஊடான காணிப் பதிவுகள் முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும் என்பது எமது நோக்கமல்ல. மாறாக, அதன் பெயரால் அரங்கேறும் மிகப்பெரிய மோசடிகளைத் தடுத்து நிறுத்த வேண்டியதே எமது தலையாய கடமையாகும்.

வலி. வடக்கில் இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் காணிகள் கூட இவ்வாறு போலி உறுதிகள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளன.

மேலும், கடந்த ஆட்சியின் போது காணி மோசடிகளுடன் தொடர்புடைய சட்டத்தரணிகளைக் கைது செய்வதற்குப் பொலிஸார் சட்டமா அதிபரின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற கட்டுப்பாடான வழிகாட்டல் வழங்கப்பட்டிருந்தது.

இந்த விடயத்தை நான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கவனத்திற்குக் கொண்டு சென்றதையடுத்து, தற்போது அந்தத் தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

போலி உறுதிகளை எழுதுவதற்குப் பதிவாளர் திணைக்களத்திலுள்ள சில அதிகாரிகளும் உடந்தையாக இருந்து, காணிகளின் மூல ஆவணங்களான தோம்புகளை அழித்திருக்கின்றார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.

எனவே, இவ்வாறான மோசடிகளைத் தடுப்பதற்கான உறுதியான பொறிமுறையை நாம் விரைவாக உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

காணி  உறுதிப்படுத்தல்

இதன்போது, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் மேலதிக மாவட்டச் செயலாளர்கள் (காணி) தமது மாவட்டங்களில் எதிர்கொள்ளும் சிக்கல்களை எடுத்துரைத்துள்ளனர்.

ஒரு காணி அரச காணியா அல்லது தனியார் காணியா என்பதை உறுதிப்படுத்துவதற்குப் பதிவாளர் திணைக்களம் 14 நாட்கள் அவகாசம் மட்டுமே வழங்குவதாகவும், குறித்த காலத்துக்குள் பதிலளிப்பது சவாலானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெளிப்படுத்தல் உறுதி மோசடி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! சசிதேவி ஜலதீபன் | Legal Action Affidavit Fraud Sasidevi Jalatheepan

மேலும், போலிப் பெயர்களில் உறுதிகள் எழுதப்படுவதால் சிக்கல்கள் மேலெழுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்குப் பதிலளித்த வட மாகாண காணி ஆணையாளர், அரச காணியொன்று வெளிப்படுத்தல் உறுதி மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பின்னர் அதனை இரத்துச் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்திய பதிவாளர் நாயகம், '2022ஆம் ஆண்டு சுற்றறிக்கையின்படி அரச காணியா என்பதை உறுதிப்படுத்தப் பிரதேச செயலாளர்களுக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேவையேற்படின் மேலதிக கால நீடிப்பையும் கோர முடியும்.

வழக்கு பதிவுகள்

பிரதேச செயலகக் காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டங்களில் காணி உரித்துத் திணைக்கள அதிகாரிகளையும் இணைத்துக்கொள்வதன் மூலம் இதற்கான தீர்வுகளை இலகுவாகப் பெறலாம் என்றார்.

எதிர்காலத்தில் வெளிப்படுத்தல் உறுதி மூலம் காணிகள் பதிவு செய்யப்படும் போது, அதனைப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதைக் கட்டாயமாக்கும் சரத்து சட்டத்திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என ஆளுநர் முன்மொழிந்தார்.

வெளிப்படுத்தல் உறுதி மோசடி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! சசிதேவி ஜலதீபன் | Legal Action Affidavit Fraud Sasidevi Jalatheepan

மேலும், இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னாள் மாவட்ட நீதிபதி க.அரியநாயகம், வெளிப்படுத்தல் உறுதிகளைப் பதிவு செய்யும்போது காணியின் வரைபடம் மற்றும் நான்கு எல்லைகளிலும் உள்ளவர்களிடமிருந்தான சத்தியக்கடதாசி ஆகியவற்றைக் கட்டாயமாக்குதல் உள்ளிட்ட சட்டத்திருத்தங்களின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் சிறப்புக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிகள், காணி மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தரவுகளைச் சமர்ப்பித்துள்ளனர்.

2023: 16 வழக்குகள் பதிவு (15 நிறைவுற்றன) 2024: 31 வழக்குகள் பதிவு (25 நிறைவு, 6 விசாரணை நிலுவை) 2025: 20 வழக்குகள் பதிவு (6 நிறைவு, 14 விசாரணை நிலுவை) 2026 (மே வரை): 9 வழக்குகள் பதிவு (1 நிறைவு, 8 விசாரணை நிலுவை) இந்த மோசடிகளுடன் தொடர்புடைய 9 பிரசித்த நொத்தாரிசுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கையில் பெருந்தொகை போலி அமெரிக்க டொலர்களுடன் சிக்கிய வெளிநாட்டவர்கள்

தென்னிலங்கையில் பெருந்தொகை போலி அமெரிக்க டொலர்களுடன் சிக்கிய வெளிநாட்டவர்கள்

உறுதிப்படுத்தல் சான்றிதழ் வழங்கல்

அத்துடன், காணி ஆவணங்கள் தொடர்பான விசேட பயிற்சிகளைத் தமது புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக ஆளுநரும் பதிவாளர் நாயகமும் உறுதியளித்துள்ளனர்.

2022ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 3,839 வெளிப்படுத்தல் உறுதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளனர்.

வெளிப்படுத்தல் உறுதி மோசடி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! சசிதேவி ஜலதீபன் | Legal Action Affidavit Fraud Sasidevi Jalatheepan

(யாழ்ப்பாணம் - 1874, மன்னார் - 958, கிளிநொச்சி - 570, முல்லைத்தீவு - 321, வவுனியா - 116). காணாமல் போன நபர்கள் பற்றிய அலுவலகத்தின் ஊடாக வழங்கப்படும் 'காணாமல் போனமை உறுதிப்படுத்தல் சான்றிதழ்' வழங்கும் நடைமுறையைத் துரிதப்படுத்துமாறும், அதன் சட்டரீதியான அங்கீகாரம் மற்றும் காலாவதித் திகதி தொடர்பில் காணப்படும் குறைபாடுகளை நீக்குமாறும் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தச் சான்றிதழ்களைக் கொண்டுள்ள குடும்பங்கள் நிதி நன்மைகளைப் பெற முடியாமல் உள்ளதை ஓ.எம்.பி.இன் யாழ். இணைப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் நீதி அமைச்சுடன் மேலதிக பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாகப் பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நொத்தாரிசுகளுக்கான சுற்றறிக்கைகள் 

அத்துடன், நொத்தாரிசுகளுக்கான சுற்றறிக்கைகள் தமிழ் மொழியிலும் வெளியிடப்பட வேண்டும் என்ற ஆளுநரின் கோரிக்கைக்கு, தற்போது மும்மொழியிலும் வெளியிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பதிலளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிறப்பு/இறப்புப் பதிவாளர் நியமனங்களில் காணப்படும் பாரபட்சமான நடைமுறைகள் (உ-ம்: 65 வயது ஓய்வு எல்லை, விதவை/தபுதாரர் தொடர்பான விதிகள்) திருத்தியமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு, சேவைப் பிரமாணக் குறிப்பை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் உறுதியளித்துள்ளார்.

வெளிப்படுத்தல் உறுதி மோசடி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! சசிதேவி ஜலதீபன் | Legal Action Affidavit Fraud Sasidevi Jalatheepan

மேலும், வடக்கு மாகாணத்தினுள் பதிவாளர் திணைக்களத்தின் தேவைகள் மற்றும் ஆளணி பரவலாக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன.

இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர்கள் (காணி), வடக்கு மாகாண பிரதிப் பதிவாளர் நாயகம், முன்னாள் மாவட்ட நீதிபதி, வடக்கு மாகாண காணி ஆணையாளர், யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர், சிறப்புக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிகள் மற்றும் 5 மாவட்டங்களினதும் மேலதிக மாவட்டப் பதிவாளர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்! வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவு

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்! வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவு

மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US