போர்நிறுத்த தீர்மானம்: பிரித்தானியா - லெபனான் இடையே விசேட பேச்சுவார்த்தை
லெபனான் பிரதமர் நஜிப் மிகாட்டி(Najib Mikati) மற்றும் பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி இடையே விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது லண்டனில் இடம்பெற்றதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லெபனானின் காபந்து பிரதமராக பதவி ஏற்றுள்ள மிகாட்டி, இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவிற்கும் இடையே உடனடி போர்நிறுத்தம் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
நஜிப் மிகாட்டி
மேலும் லெபனான், இராஜதந்திர தீர்வை எட்ட சர்வதேச தரப்புடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக நஜிப் மிகாட்டி விளக்கமளித்துள்ளார்.
நாங்கள், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனியுடன் ஒத்துழைத்து, அனைத்து துறைகளிலும் இராணுவ தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதன் மூலம் எமது நாட்டு இராணுவத்திற்கு ஆதரவளிக்கவுள்ளோம் என்றும் கூறியள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |