கனடாவில் கோர விபத்து: 4 இந்தியர்கள் உயிரிழப்பு!
கனடாவில்(Canada) இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
கனடாவின் - ஒன்டாரியோ(Ontario) மாகாணத்தில் உள்ள டொரன்டோ நகரில் கடந்த வியாழக்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
டொரன்டோ நகரில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பில் மோதியுள்ளது.
Canada: 4 Indians from gujrat killed after their tesla car burst into flames, police suspect overspeeding pic.twitter.com/1VH1ShbJC3
— ProjectPeaceX (@unkwnuserr0) October 28, 2024
ஒன்டாரியோ பொலிஸார்
இந்நிலையில், கம்பத்தில் மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி எரிந்துள்ளது. இதன்போது காரில் இருந்த 4 இந்தியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஒன்டாரியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில், பலத்த காயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி விபத்தில் உயிரிழந்தத இந்தியர்களுக்கு டொரன்டோவில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam