வெகு விரைவில் லெபனானின் நிலை இலங்கையிலும் ஏற்படலாம்! - ஹர்சா டி சில்வா எச்சரிக்கை
இலங்கை எதிர்காலத்தில் லெபனானின் நிலைக்கு தள்ளப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா எச்சரித்துள்ளார். லெபனான் தற்போது எதிர்கொள்ளும் நிலையை இலங்கை எதிர்கொள்ளவேண்டிவரலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
50 வீத மருத்துவர்கள் ஏற்கனவே வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிவிட்டனர். சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் லெபான் அரசாங்கத்திற்கும் இடையில் கடும் கருத்துவேறுபாடு காணப்பட்டது என தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் இதேநிலை காணப்படுகின்றது. ஒரு குழுவினர் சர்வதேச நாணயநிதியத்தை நாடவேண்டும் என்கின்றனர். இன்னொரு குழுவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். என்ன செய்திருக்கலாம் என இனிமேலும் பேசுவதில் பயனில்லை.
நாடாளுமன்றத்தை எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னரே சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடியிருக்கவேண்டும் என நிதியமைச்சர் அலி சப்ரியே தெரிவித்துள்ளமை அரசாங்கம் தனது கடமையை நிறைவேற்ற தவறிவிட்டது என்பதை வெளிப்படுத்தியுள்ளது எனவும் ஹர்சா டிசில்வா தெரிவித்துள்ளார்.