நாங்கள் அரசாங்கத்தில் இருந்து விலகுவது சூரியன் மேற்கில் உதிப்பதை போன்றது- வாசுதேவ நாணயக்கார
அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தமது அணியினர் அரசாங்கத்தில் இருந்து விலகுவது சூரியன் மேற்கில் உதிப்பது போன்றது எனவும்,அப்படியான சம்பவம் நடக்காது எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் அவரது தலைமையில் நடைபெற்ற அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து நாங்கள் வெளியேறுவது என்பது சூரியன் மேற்கில் உதிப்பது போன்ற வேலை. அரசாங்கத்தை காப்பதற்காகவே நாங்கள் ஒன்று கூடினோம்.
தற்போது நாலாபுறமும் சூழ்ச்சிக்காரர்கள். அரசாங்கத்திற்குள்ளும் வெளியிலும் இருக்கின்றனர் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் இந்த கருத்தானது, விமல் வீரவன்ச தரப்பினர் துள்ளி குதித்து காட்டி வருவது அரசாங்கத்திற்கு எதிரான பொய்யான சண்டித்தனம் மாத்திரமே என்பதுடன், பதவியை விட்டு செல்ல வேண்டிய ஆபத்து ஏற்பட்டால், வாலை மடக்கிக்கொண்டு அடங்கி விடுவார்கள் என்பது தெளிவாகியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.





அதிக அளவில் நஷ்டம்.., தான் விளைவித்த காய்கறியை வைத்து 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கும் விவசாயி News Lankasri
