கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: சந்தேக நபரை தேடும் பொலிஸார்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள ஆற்றோரத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஊழல் ஒழிப்பு பிரிவினரினால் முற்றகையிடப்பட்டுள்ளது.
ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் (17) குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது கசிப்பு உற்பத்திற்கான 200 லீற்றர், 2 இரும்பு பரள், செப்பு குழாய் ,1 கேஸ் அடுப்பு , 4 அடி நீளமுடைய ரப்பர் குழாய் உள்ளிட்ட உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் உட்பட்டவர்களுக்கு விளக்கமறியல்
பொலிஸார் நடவடிக்கை
மேலும், கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்த சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.

குறித்த சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதுடன் சான்றுப்பொருட்கள் யாவும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிநடத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான அணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



மஹா சிவராத்திரி 2026 நேரலை
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan