வீதியில் தூங்கிய நபர் விபத்தில் பலி
மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள தும்பாஞ்சோலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (17.06.2025) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்த நபர், வீதியில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் இதன்போது வாகனம் ஒன்று இளைஞன் மீது மோதிச் சென்றதால் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தப்பி ஓட்டம்
இளைஞன் மீது வாகனத்தை ஏற்றிய நபர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் மண்டூர் சின்னவத்தையைச் சேர்ந்த 25 வயதுடைய செல்வம் சாந்தன் செல்லையா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தும்பாஞ்சோலை பகுதியிலுள்ள வீதிக்கு அருகிலுள்ள வேளாண்மை காவலுக்காக குறித்த இளைஞன் உட்பட இருவர் வீதி ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
உயிரிழந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடப்பதை கண்டு அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை இளைஞனுடன் தூங்கிய மற்றுமொரு இளைஞன் தெய்வாதீனமாக தப்பியுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறியவர்கள் முதல் பெரியோர் வரை ஆடைகளின்றி அடித்து கொலை செய்யப்பட்ட துயரம்! சபையில் நீண்ட வெளிப்படுத்தல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
