மட்டக்களப்பில் இரகசிய தகவலில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - ஒருவர் கைது
மட்டக்களப்பு - ஆரையம்பதி பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை (7) கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்ட நிலையில், உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 1500 மில்லி லீற்றர் கசிப்பும், 83000 மில்லி லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்
காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தவராசா றஜிக்காந்தனுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று திங்கட்கிழமை ஆரையம்பதி செவநகர் பகுதியிலுள்ள குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 54 வயதுடைய ஒரு வரை கைது செய்ததுடன் 1500 மில்லி லீற்றர் கசிப்பும், 83000 மில்லி லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்தவரை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23