ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வரை நீளும் நாமல் கைது விவகாரம்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது விவகாரம் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் குரல் எழுப்பும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் மிலிந்த ராஜபக்ச சுவிட்சர்லாந்து விஜயம் செய்துள்ளார்.
இலங்கையின் முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம், முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் சுரேஷ் சல்லேயின் தடுப்புக்காவல் உள்ளிட்ட சில விவகாரங்கள் குறித்து குரல் கொடுப்பதற்காக ஜெனிவா சென்றுள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது இந்த விடயங்களை எழுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் குறித்தும் கவனத்தை ஈர்க்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள மிலிந்த ராஜபக்ஷ, 18 ஆண்டுகளுக்குப் பின்னர் தாம் மீண்டும் ஜெனிவா திரும்பியுள்ளதாகவும், நாட்டில் "அடக்கப்பட்ட எதிர்க்கட்சியின் அரசியல் குரல்களைப்" பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகவே இம்முறை வருகை தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தாம் சுட்டிக்காட்ட விரும்பும் இந்த விடயங்களை கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் பரந்த சூழலில் அணுக வேண்டும் என மிலிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri