யாழ் . காங்கேசன்துறையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை(Photos)
யாழ். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சுற்றிவளைப்பானது இன்று(18.12.2023) காங்கேசன்துறை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
பொலிஸாரின் முற்றுகை
வறுத்தலைவிளான் பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக காங்கேசன்துறை பொலிஸ் விசேட பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், கிடைக்கப்பெற்ற தகவலுக்கு இணங்க காங்கேசன்துறை தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினரால் குறித்த பகுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை கசிப்பு தயாரிக்கும் உபகரணங்கள் மற்றும் கோடா என்பவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக நிதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு வார காலத்திற்கு போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு இலங்கை பொலிஸ் மா அதிபரினால் பொலிஸாருக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |