இலங்கையில் உலங்குவானூர்தியை கொள்வனவு செய்த முன்னணி அரிசி வர்த்தகர்
பொலன்நறுவையை சேர்ந்த முன்னணி அரிசி வர்த்தகர் ஒருவர் உலங்குவானூர்தி ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.
அண்மைய காலமாக மிகப் பெரியளவில் அரிசி வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் அந்த வர்த்தகர் தனது பயண தேவைகளுக்காக உலங்குவானூர்தியை கொழும்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து 11 கோடி ரூபாவுக்கு விலைக்கு வாங்கியுள்ளார்.
ஹிங்குரக்கொட விமான ஓடு தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த உலங்குவானூர்திக்காக பொறியியலாளர் ஒருவரையும் விமானி ஒருவரையும் அவர் பணிக்கு அமர்த்தியுள்ளார்.
அத்துடன் இந்த உலங்குவானூர்தி திருமண வைபவங்களுக்கான பயண வாசதிகள் மருத்துவ சிகிச்சைக்கான பயண வசதிகள், தனிப்பட்ட பயணங்கள், பொருட்களை கொண்டு செல்லுதல் மற்றும் வினோத பயணங்களுக்கும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் சகோதரர் பொலனநறுவையை சேர்ந்த முன்னணி அரிசி வர்த்தகர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்கள் - முபாரக்
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri