முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கிய பிரமுகர் கைது
நீதிமன்றத்தில் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தி, நீதிமன்றத்தை அவமதித்து, அவற்றின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவவை (Duminda Nagamuwa) கடுவலை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
துமிந்த நாகமுவ, பொரல்லையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சம்பந்தமாக நீதிமன்ற பிறப்பித்திருந்த பகிரங்க பிடியாணைக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கடுவலை பொலிஸார் கூறியுள்ளனர்.
கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டு மக்களை சிரமங்களுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உட்பட 5 பேருக்கு பிணை வழங்கக் கோரி கடந்த நவம்பர் 5 ஆம் திகதி நாகமுவ உட்பட முன்னிலை சோசலிசக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதன் போது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக குற்றம் சுமத்தி நீதிமன்றம் நாகமுவவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தது.