தலைவர் இறந்தார் என்றால் கண்முன்னே தகுந்த ஆதாரம் முன்வைக்க வேண்டும்: முன்னாள் போராளி
தலைவர் இறந்தார் என்றால் எங்கள் கண்முன்னே தகுந்த ஆதாரம் முன்வைக்க வேண்டும் என மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் தலைவர் முன்னாள் போராளி தேவராஜா தீபன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ தேசிய தலைவருக்கு வீரவணக்க கூட்டத்தை எதிர்வரும் 02.08.2025 புலம்பெயர் தேசத்தில் நடாத்த இருக்கிறார்கள்.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றையதினம் (29) பிற்பகல் 12 மணியளவில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடாத்தி கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வீர வணக்க கூட்டம்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தலைவர் இருக்கிறாரோ இல்லையோ என்பது பிரச்சினை இல்லை. இல்லை என்றால் அதற்கான ஆதாரம் தர வேண்டும்.
எங்கள் கண்முன்னே வாழ்ந்த ஒரு தலைவர் இறந்தார் என்றால் எங்கள் கண்முன்னே தகுந்த ஆதாரம் முன்வைக்க வேண்டும்.
அப்போது தான் வீர வணக்க கூட்டத்தை நடாத்துவதென்ற முடிவுக்கு வரமுடியும். தங்கள் சுயநலங்களுக்கும் தங்களது விருப்பங்களுக்கும் செய்ய முடியாது.
தமிழ் சமூகத்திற்காக நீண்ட காலமாக அர்ப்பணித்து செயற்பட்ட ஒருவர். ஆகையால் நாம் அவ்வாறான முடிவிற்கு வர முடியாது என மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
