மட்டக்களப்பு தொடருந்து நிலையத்திற்கு சொந்தமான காணியில் தீ விபத்து
மட்டக்களப்பு தொடருந்து நிலையத்திற்கு சொந்தமான காணியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று(29) காலை மட்டக்களப்பு தொடருந்து நிலையத்தின் விடுதிகள் மற்றும் பெற்றோலியம் கூட்டுத்தாபனத்திற்கு அருகிலிருந்த காணியில் தீ சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்களினால் இந்த தீ வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த தீவிபத்து தொடர்பில் மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொலிஸார் விசாரணை
இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த தீ விபத்து இடம்பெற்ற பகுதிக்கு சென்ற இராணுவத்தினர், தொடருந்து நிலைய காவலர்கள் மற்றும் மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன்,மாநகரசபை உறுப்பினர்கள் தீயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு உதவி வழங்கி வருகின்றனர்.
பெற்றோல் களஞ்சியங்கள் உள்ள காணிக்கு அருகில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதனால் அவற்றினை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் குறித்த பகுதியில் குவிந்துள்ளதை காணமுடிகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
