அவசர மருத்துவ பற்றாக்குறையால் கடும் நெருக்கடி
இலங்கையில் அவசர வைத்திய சேவைக்கான மையப்பகுதியொன்று இல்லை என்பதால் மரணிப்பவர்களின் தொகை அதிகரித்துள்ளது என விசேட வைத்திய நிபுணர் கோகிலா திலக்கசிறி குறிப்பிட்டுள்ளார்.
தொலைக்காட்சி சேவை ஒன்றில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "2004ஆம் ஆண்டு சுனாமியின் பின்னரே எமது நாட்டுக்கு அவசர மருத்துவம் என்ற நிலை உருவாக்கப்பட்டது.
அவசர அழைப்பு
அன்று அவுஸ்திரேலியா எமக்கு மருத்துவ உதவிகளை செய்வதற்கு தயாரான போதே இதன் அவசியத்தன்மை உணரப்பட்டது. அவசர மருத்துவம் என்பது பல தொழிற்பாடுகளை உள்ளடக்கியதாகும்.
ஏதோ ஒரு சம்பவம் நடந்த பின்னர் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வது, அங்கிருந்து பாதிக்கப்பட்டவர்களை கொண்டு வருவது மற்றும் வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களை மாற்றி அவரச மருத்துவம் தேவையானவர்களை குறித்த பகுதிக்கு அனுப்புவது என்ற தொடர் படிமுறைகளை கொண்டதாகும்.
அவ்வாறான ஒரு செயற்பாடு எமது நாட்டில் இப்போதைக்கு இல்லை. விபத்து ஒன்று நடந்தால் 1990 அவசர அழைப்பு மட்டுமே காணப்படுகிறது. அவ்வழைப்பில் வைத்தியசாலைக்கு மட்டுமே தகவல் செல்லுகிறது.
இதர நிறுவனங்களான தீயணைப்பு மற்றும் பொலிஸ்-இராணுவம் ஆகியன இணைத்து கொள்ளப்படவில்லை" என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா



