அக்குரேகொட படுகொலை: கொடூரச் செயல்கள் முடிவுக்கு வர வேண்டும்! சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்
அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம், கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் இன்று(15.02.2026) விசேட பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்டி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.
குற்றவாளிகள் தொடர்பில் விசேட கோரிக்கை
அத்துடன், சாய்ந்தமருது பகுதியில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடப்பட்ட போது,
சட்டத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் ஜனநாயகத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் நேரடியான அச்சுறுத்தலாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸ் திணைக்கள அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொடூரச் செயல்கள் முடிவுக்கு வர வேண்டும்..
மேலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இத்தகைய கொடூரச் செயல்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் ஆயுத கலாச்சாரத்தை முற்றாக ஒழித்து நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான, சுயாதீனமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், சட்டத்துறையின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தலைமையில் கொழும்பு நகரிலுள்ள சட்டத்தரணிகள் சங்க செயலகத்தில் அமைந்துள்ள எச்.டபிள்யூ. ஜயவர்தன கேட்போர் கூடத்தில் இன்று நடைபெறும் கூட்டத்தில் நேரில் கலந்து கொள்ள முடியாதிருந்தாலும், அதற்கு தங்களின் முழுமையான ஆதரவை வழங்குவதாக சம்மாந்துறை கிளை அறிவித்துள்ளது.
இந்த ஊடக சந்திப்பில் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா, உப தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். நஸீல், செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி வை.எம்.ஏ. சியாத், பொருளாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ஷாமிலா மன்சூர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எச். அரூஸ் உட்பட இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சம்மாந்துறை கிளை உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

பல வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான பணம்: இலங்கைக்கு வந்துள்ள பெருமளவு தங்க பிஸ்கட் - அம்பலமான விடயம்
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam