100 கோடி ரூபா இழப்பீடு கோரி சரவணபவனுக்கு கடிதம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் 100 கோடி ரூபா இழப்பீடு கோரி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி உப தலைவர் சண்முகநாதன் ஜெயந்தன் சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது தமிழரசுக் கட்சி சார்பில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் வாக்குகளைப் பெறுவதற்காக மதுபானம் வழங்கப்பட்டது என்று 2025-05-12 அன்று பொது வெளியில் சரவணபவன் பொய்யாக உரையாற்றியமையால் ஏற்பட்ட இழப்புக்குப் பரிகாரமாக 100 கோடி ரூபா வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இதனை 14 தினங்களுக்குள் வழங்கத் தவறினால் இதற்கான வட்டிப் பணம் மற்றும் வழக்குச் செலவுடன் வழங்கக் கோரி வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று 2025-05-14 அன்று சட்டத்தரணி கீர்த்தனா கமலச்சந்திரன் ஊடாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri