சட்டங்கள் முஸ்லிம் மக்களை மட்டுமே குறி வைக்க முடியாது! - நீதி அமைச்சர்
சட்டங்கள் முஸ்லிம் மக்களை மட்டுமே குறிவைக்க முடியாது. ஒரு சட்டம் மற்றும் கொள்கையை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டுமானால் இலங்கையில் ஏனைய மதங்கள் பின்பற்றும் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் அலி சப்ரி,
இலங்கையில் கண்டியன் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம், யாழ்ப்பாண தேசவழமைச் சட்டம், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் போன்ற பல தனியார் மத சட்டங்கள் நடைமுறையில் உள்ளன என்று குறிப்பிட்டார்.
இந்தநிலையில் ஒரு மதச் சட்டத்தை மட்டுமே அகற்ற முடியாது. இலங்கையில் உள்ள அனைத்து தனியார் மதச் சட்டங்களும் ஒன்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
முஸ்லிம் சட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி,
முஸ்லிம் பெண்கள் தங்கள் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்ளவில்லை, அதே நேரத்தில் அவர்களின் தந்தையர் அவர்கள் சார்பாக திருமண ஆவணத்தில் கையெழுத்திட அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம் பெண்களின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை 18 ஆக திருத்துவதற்கு 2020 நவம்பரில் அமைச்சரவை முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.





அதிக அளவில் நஷ்டம்.., தான் விளைவித்த காய்கறியை வைத்து 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கும் விவசாயி News Lankasri
