இலங்கையுடன் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ள ஐந்து விமான சேவை நிறுவனங்கள்
ஐந்து விமான சேவை நிறுவனங்கள் இலங்கையுடன் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் ஐந்து விமான சேவை நிறுவனங்கள் இலங்கைக்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன.
பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து, ரஸ்யா உள்ளிட்ட நாடுகள் இவ்வாறு இலங்கைக்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன.
சுவிஸ் விமான சேவை நிறுவனமான எடெல்ஸ்விஸ் நிறுவனம் நவம்பர் மாதம் இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்க உள்ளது.
ரஸ்யாவின் ஏரோப்ளோட் நிறுவனமும் நவம்பர் மாதம் விமான பயணங்களை ஆரம்பிக்கவுள்ளன.
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஸ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரும் முனைப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri