லாஃப் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு
லாஃப் எரிவாயுவின் விலை திருத்தம் தொடர்பில் அந்நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய லாஃப் எரிவாயுவின் விலையும் திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் விலை திருத்தம் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
லாஃப் எரிவாயுவின் விலையில் திருத்தம்
இறுதியாக ஏப்ரல் மாதம் லாஃப் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்பட்டு 3,738 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
இதேவேளை 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 402 ரூபாவால் குறைக்கப்பட்டு 1,502 ரூபாவாகவும் 2.3 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 183 ரூபாவால் குறைக்கப்பட்டு 700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
லிட்ரோ சமையல் எரிவாயு விலை
இந்நிலையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நாளை (04.06.2023) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எரிவாயு விலை திருத்தத்தின் பயனை மக்களுக்கு வழங்குவதற்கு நுகர்வோர் அதிகாரசபையின் தலையீட்டுடன் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
