லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு : ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு
நாடு முழுவதும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், வீடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் 3,000 மெட்ரிக் டன் எரிவாயுவை, மாதாந்த அடிப்படையில் விநியோகம் செய்வதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
சமையல் எரிவாயு வழங்கும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான Laughfs Gas-க்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்கு உள்நாட்டு விற்பனை
இது தொடர்பில், வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake), சமையல் எரிவாயு வழங்குநர் குறைந்தபட்சம் 7,500 மெட்ரிக் டன் எல்பி எரிவாயு இருப்பை கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்
உள்நாட்டு சந்தைக்கு LP எரிவாயு தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்ய இது அவசியமானது.
இந்தநிலையில், 9,000 மெற்றிக் டன் எரிவாயுவை Laugfs Gas PLC நிறுவனம் அடுத்த மூன்று மாதங்களுக்கு உள்நாட்டு விற்பனைக்கு அனுமதிக்கவேண்டும்.
இது கடந்த வெள்ளிக்கிழமை முதல் அடுத்த ஆண்டு பெப்ரவரி 21 வரை நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |