லாப் நிறுவன எரிவாயு சிலிண்டரின் விலை 4199 ரூபா...! வெளியாகியுள்ள தகவல்
12.5 கிலோகிராம் லாப் நிறுவன எரிவாயு சிலிண்டர் விலை 4199 ரூபாவாகவும், 5 கிலோகிராம் லாப் நிறுவன எரிவாயு சிலிண்டர் விலை 1680 ரூபாவாகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லாப் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
என்ற போதும் தாம் விலை அதிகரிப்பை மேற்கொள்ளவில்லை என லாப் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிடிய தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன கூறுகையில்,
விலை கட்டுப்பாடு இல்லாமையினால், எரிவாயு நிறுவனங்கள் விலை அதிகரிப்பை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
டொலர் பெறுமதி அதிகரிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கபபடலாம்.
விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு அறிவிக்க வேண்டியது அவசியம் கிடையாது.
அசாதாரண விலை அதிகரிப்பாயின் மாத்திரமே அமைச்சு தலையிடும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
