மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர் கைது.. லசித் மலிங்கவுக்கு ஏற்பட்ட சிக்கல்
அண்மையில், ரேனுக பெரேரா என்பவர் லசித் மலிங்கவின் மாமனார் என சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவியதை அடுத்து, இணையத்தில் அது பெரும் பேசுபொருளாக மாறியது.
இருப்பினும், லசித் மலிங்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் இடுகையிட்டுள்ள பதிவொன்றில் இதன் உண்மைத்தன்மையை தற்போது தெளிவுபடுத்தியுள்ளார்.
முகப்புத்தக பதிவு..
அந்தப் பதிவில், ரேனுக பெரேராவுக்கு இரண்டு மகன்கள் மட்டுமே உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரேனுக பெரேராவுக்கு மகள்கள் எவரும் இல்லாத நிலையில், அவர் மலிங்கவின் மனைவியின் தந்தை அல்ல என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
அத்துடன், தனது உண்மையான மாமனார் பற்றிய விபரங்களையும் மலிங்க வெளிப்படுத்தியுள்ளார்.
அவர், "எனது மாமனார் அமெரிக்காவில் நல்லமுறையில் வாழ்ந்து வருகிறார்" என்று அவர் கூறியுள்ளார்.
அண்மையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான ரேனுக பெரேரா இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சவூதியில் கைதான இலங்கை இளைஞன் அனோஜனுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை