கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவன்! காரணம் வெளியானது
சிறுவன் ஒருவன் லசித் மாலிங்க போன்று பந்து வீசும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியிருந்தது.
இதனை அவதானித்த லசித் மாலிங்க இந்த சிறுவனை கண்டுபிடிக்க உதவுமாறு தனது முகநூல் பதிவொன்றில் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
சிறுவன் தொடர்பான தேடுதலில் வீரவில பகுதியை சேர்ந்த தரம் ஐந்தில் கல்வி கற்கும் தினித் என்ற சிறுவனே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தினேத் அனுஹஸ் பந்து வீசும் பாணி சிறப்பாக உள்ளமை காரணமாக அவரை தேடியதாக லசித் மாலிங்க மேலும் ஒரு காணொளியினை முகப்புத்தகத்தில் பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிறுவனை கண்டுப்பிடிக்க உதவிய அனைவருக்கும் நன்றி எனவும், சிறுவன் தொடர்பில் முதல் அடி எடுத்து வைத்துள்ளதாகவும் லசித் மாலிங்க காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறுவனின் திறமையை பாராட்டி சிறந்த கிரிக்கெட் பயிற்சியாளரிடம் பயிற்சிகளை பெறுவதற்கான வாய்ப்புக்களை பெற்றுத்தரவுள்ளதாகவும்,மற்றுமொரு சிறந்த பாடசாலையில் சேர்க்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan