திருகோணமலையில் இரு வேறு குழுக்களுக்கிடையே மோதல் : 07 பேர் வைத்தியசாலையில்
திருகோணமலை (Trincomalee) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரு வேறு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்பில் ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மொரவெவ பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்தொன்றில் ஏற்பட்ட கைகலப்பில் நொச்சிக்குளம்- சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 4 பேர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயம் அடைந்த நிலையில் இன்று (15) அதிகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 20இற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட நான்கு இளைஞர்களே இவ்வாறு படுகாயம் அடைந்துள்ளனர்.
திருகோணமலை மஹதிவுல்வெவ
இதேவேளை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் மஹதிவுல்வெவ பிரதேசத்துக்கு பொறுப்பான உத்தியோகத்தர் தனது குடும்பத்தாருடன் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது சக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரினால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த பெப்ரவரி நான்காம் திகதி சுதந்திர தினத்தன்று தாக்குதலை மேற்கொண்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உரிய நேரத்திற்கு கடமைக்கு வருகை தராமையால் பொறுப்பதிகாரி எச்சரிக்கை விடுத்தமையினால் மது போதையில் இருந்த குறித்த நபர் முச்சக்கர வண்டியில் சென்ற குடும்பத்தினரை தாக்கியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
எனினும், தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
