இலங்கையில் 40 வயது காதலனின் வெறியாட்டம் - 17 வயது காதலி மீது துப்பாக்கி சூடு
பொலனறுவை மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரித்தலை யாய 04 பகுதியில் நேற்று இரவு துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர், பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும், அவரது நிலை மோசமடைந்ததையடுத்து மேலதிக சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறுமி மீது துப்பாக்கி சூடு
குறித்த சிறுமி அப்பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபருடன் சுமார் இரண்டு வருடங்களாக காதல் தொடர்பில் இருந்து வந்துள்ளார். அவருடன் சில காலம் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

குறித்த நபரின் தொல்லை தாங்க முடியாமல் சில வாரங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் தன்னுடன் வருமாறு அந்த நபர் பல சந்தர்ப்பங்களில் மிரட்டியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் தப்பியோட்டம்
இதேவேளை, நேற்றிரவு குறித்த சிறுமியும் அவரது தாயாரும் அருகில் உள்ள உறவினர் வீட்டில் வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட நிலையில், அந்த வீட்டில் இருந்த குறித்த நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் சிறுமியின் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri