ஐ. நா தலைமையகத்தின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி பதவிக்கு சோனாலி தெரிவு!
காலஞ்சென்ற ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவி ஊடகவியலாளர் சோனாலி சமரசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தில் மினிஸ்டர் கவுன்சிலராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் முதல் மனைவி ஊடகவியலாளர் ரெயின் விக்ரமதுங்க மற்றும் அவருக்கு பிறந்த லசந்த விக்ரமதுங்கவின் மூன்று குழந்தைகளும் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை கோரி உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
16 ஆண்டுகளுக்கு முன்பு பொதுவெளியில் கொல்லப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில் சந்தேக நபர்களை விடுவிக்க சட்டமா அதிபர் பரிந்துரைத்திருப்பது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க தொடர்பிலான மேலும் பல தகவல்களுடன் வருகின்றது ஐபிசி ஊடகத்தின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |