அநுரவின் தமிழை கிண்டலடித்த சிங்கள எம்.பி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் வைத்து, மக்களிடம் 'நல்லமா, நல்லமா' எனக் கூறியதை நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கிண்டலடித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய(06.02.2025) அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
“யாழ்ப்பாணத்திற்கு சென்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விமர்சித்தால், அங்குள்ள மக்கள் கைதட்டி விசிலடிப்பதில் ஆச்சரியமில்லை.
அரசாங்கத்தின் உளறல்கள்
'ஆட்சி நல்லமா நல்லமா' என யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி வினவுகிறார். ஆனால், மக்களுக்கு அரிசி, மா, உப்பு எதுவுமில்லை.
இந்த அரசாங்கம் மக்களை தேங்காய் சம்பள் உண்ண வேண்டாம் பால் சொதி செய்ய வேண்டாம் எனக் கூறுகின்றது.
இந்த அரசாங்கம் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். வாயை திறந்தால் அவர்கள் வாக்குகளை இழப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |