தம்புள்ளையில் சுற்றிவளைக்கப்பட்ட பெரிய வெங்காய களஞ்சியசாலை
மாத்தளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள தனியார் களஞ்சியசாலையொன்றை சோதனையிட்டதில் பெருந்தொகையான பெரிய வெங்காயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான், இந்தியா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயங்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விசாரணை ஆரம்பம்
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை களஞ்சியசாலைகளில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை ஆரம்பித்துள்ள விசாரணைகளின் போதே இந்த தனியார் களஞ்சியசாலை முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்ட நிறுவனங்கள் அல்லது விற்பனை வலையமைப்புகள் தொடர்பான சரியான தகவல்களை முன்வைப்பதற்கான குறிப்பிட்ட ஆவணங்கள் அவர்களிடம் காணப்படவில்லை என்றும் மாத்தளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட தரப்பினரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக மாத்தளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 1 மணி நேரம் முன்
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam