கடமைகளை பொறுப்பேற்ற மன்னார் மாவட்ட புதிய அரச அதிபர் (Photos)
மன்னார் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக க.கனகேஸ்வரன் இன்று(23) தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நியமனத்தில் நீண்ட மாதங்களாக தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் புதிய அரச அதிபராக கடந்த 21 ஆம் திகதி பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகவிடமிருந்து நியமன கடித த்தை பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் புதிய அரச அதிபரை வரவேற்கும் நிகழ்வு இன்று(23) மாவட்ட செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
மாவட்ட அபிவிருத்தி
குறித்த நிகழ்வின் பின்னர் புதிய அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் தீர்க்கப்படாமல் காணப்படும் காணி விடுவிப்பு, சட்டவிரோத மணல் அகழ்வு, சுற்றுசூழல் பிரச்சினை, கழிவகற்றல், வனஜீவரசிகள் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களத்தின் கீழ் காணப்படும் காணிகளை விடுவிக்கும் விடயங்களை முன்னிலைப்படுத்தி செயற்பட உள்ளதாகவும் அதே நேரம் மாவட்ட அபிவிருத்தி விடயங்களை துரிதப்படுத்தி மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிகழ்வில் மாவட்டத்தின் முன்னால் அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேல் , மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் ,பிரதேச செயலாளர்கள் உட்பட திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள், மதத்தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
