கோவிட் தொற்றால் பெருமளவான சிறைக் கைதிகள் பாதிப்பு
கோவிட் மூன்றாம் அலையில் நாடளாவிய சிறைச்சாலைகளில் 260 சிறைக்கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகளில் ஏற்கனவே கோவிட் தொற்றுக்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
எனினும் தற்போது கோவிட் தொற்று அதிகரித்திருப்பதாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் உள்ளவர்களை பார்வையிட வருவோருக்கு அண்மையில் தடைகளும் ஏற்படுத்தப்பட்டன.
அத்துடன் புதிய கைதிகள் வேறாக வைக்கப்பட்டு பீசீஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பீசீஆர் பரிசோதனையில் எவராவது தொற்றாளராக கண்டறியப்பட்டால் அவர்-அவள்
கந்தக்காடு முகாமுக்கு அனுப்பப்படுவதாகவும் சிறைச்சாலைப் பேச்சாளர்
தெரிவித்துள்ளார்.