இன்று முதல் 18 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிரடியாக குறைக்க தீர்மானம்
லங்கா சதொச ஊடாக 18 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருட்களின் விபரம்
அதன்படி, இன்று (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் 18 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெரிய வெங்காயம், வெள்ளைச் சீனி, பருப்பு, தட்டப்பயறு , கடலை, பாசிப்பயறு, நிலக்கடலை, கோதுமை மா, சிவப்பு அரிசி , சிவப்பு நாடு அரிசி, சம்பா அரிசி, வெள்ளை நாடு அரிசி மற்றும் பொன்னி சம்பா அரிசி ஆகியன இவற்றில் உள்ளடங்கியுள்ளன.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 13 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri