ஜப்னா கிங்ஸை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது காலி அணி
ஐந்தாவது லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நேற்று ஆரம்பமாகிய நிலையில் இரண்டாம் நாளான இன்று காலி டைடன்ஸ் (Galle Titans) மற்றும் ஜப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணிகள் பலப்பரிட்சை நடத்தின.
இதன்படி இன்ற ஆட்டத்தில் நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற ஜப்னா அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து 20 ஓவர் நிறைவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஜப்னா கிங்ஸ் அணி சார்பில் பத்தும் நிசங்க மற்றும் அவிஸ்க பெர்னாடன்டோ ஆகியோர் அரைச்சதம் கடந்து அணிக்கு வலு சேர்த்தனர்.
அவிஸ்க பெர்னாடன்டோ
பத்தும் நிசங்க 51 ஓட்டங்களையும், அவிஸ்க பெர்னாடன்டோ 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதன்படி 178 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காலி அணி 20 ஓவர் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.
? Power Blast Overs Complete! ?
— LPL - Lanka Premier League (@LPLT20) July 2, 2024
Galle Marvels score 28/1 in the Power Blast overs. Is this enough to seal the deal? They need just 20 more runs to chase the target! ??
Stay tuned for the thrilling finish!#LPL2024 #GalleMarvels pic.twitter.com/td11LHJrOT
காலி அணி சார்பில் அதிகபட்சமாக அலெக்ஸ் எல்ஸ் 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் ஜப்னா அணி சார்பில் அசித்த பெர்னான்டோ 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.
மேலும் இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டி கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற உள்ளதுடன் போட்டி பல்லேகல மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |