மூன்று மாதங்களில் பெரும் இலாபத்தை ஈட்டியுள்ள ஐ.ஓ.சி
இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி முடிவடை முதல் காலாண்டில் 3.37 பில்லியன் ரூபாய் வரியை செலுத்திய பின்னர் நிகர இலாபத்தை சம்பாதித்துள்ளது.
இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் தனது புதிய நிதி அறிக்கை, கொழும்பு பங்குச் சந்தைக்கு வழங்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரையான முதல் காலாண்டில் இந்திய எண்ணெய் நிறுவனம் 29.48 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளமை சிறப்பம்சமாகும்.
இந்த காலாண்டில் இந்திய எண்ணெய் நிறுவனம் பெற்றுள்ள மொத்த இலாபம் 5.01 பில்லியன் ரூபாய் என்பதுடன் நிறுவனத்தின் செயற்பாட்டு இலாபம் 4.08 பில்லியன் ரூபாய். வரிகளை செலுத்துவதற்கு முன்னர் நிறுவனத்தின் நிகர இலாபம் 3.95 பில்லியன் ரூபாயாகும்.
அத்துடன் இந்திய எண்ணெய் நிறுவனம் 582.37 மில்லியன் ரூபாயை வருமான வரியாகவும் செலுத்தியுள்ளது. இதனடிப்படையில் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான முதல் காலாண்டில் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் மொத்த நிகர இலாபம் 3.37 பில்லியன் ரூபாய் அதாவது 337 கோடி ரூபாய்.
அதேவேளை கொழும்பு பங்குச் சந்தையில் இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் பங்குகளின் இன்றைய விலை 32.14 வீதமாக அதிகரித்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் இந்த இலாபத்தை ஈட்டியுள்ளது.