வரவிருக்கும் தேர்தலில், ராஜபக்ச அரசாங்கம், வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படும்- இந்திய பேராசிரியர்
இலங்கை போன்ற அண்டை நாடுகளில் தேசத்தைக் கட்டியெழுப்பும் விடயங்கள் பெரும்பான்மையினரின் மதம் மற்றும் மொழியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இந்தியாவுக்கான அகதிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை பல்கலைகழகத்தின் தென், தென்கிழக்காசிய கற்கை நெறிகளுக்கான சிரேஸ்ட பேராசிரியர் வீ.சூரியநாராயன் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை, பங்களாதேஸ் மற்றும் மியன்மார் போன்ற நாடுகளில் சிறுபான்மையினர் பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
எனவே அவர்கள் இந்தியாவிற்கு வர விரும்புகிறார்கள், இந்திய தேசத்தின் புகலிடம் வழங்கும் சாதனை ஆரம்ப காலத்திலிருந்தே மிகவும் தாராளமாக இருந்ததே இதற்கான காரணம் என்று கட்டுரையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களை சமமான குடிமக்களாகக் கருதி, அவர்களுக்கு ஜனநாயக உரிமை வழங்கப்படாவிட்டால், அவர்கள் தீவு தேசத்தில் தமக்கு பாதுகாப்பு இருப்பதாக உணர மாட்டார்கள் என்பதை ராஜபக்ச சகோதரர்கள் எப்போது உணர்வார்கள்?
வடமாகாணத்தில் உள்ள தமிழர்கள் தமது பிள்ளைகளுக்கு பால் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.
உயிர்காக்கும் மருந்துகள் அரிதாகிவிட்டன. எரிபொருள் விநியோகத்தில் உதவுமாறு இராணுவம் கோரப்பட்டுள்ளது.
பெரிய மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மன்னார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏறக்குறைய 2000 பேர் கூடி, படகுகளில் ஏறி இந்தியாவுக்கு வருவதற்காகக் காத்திருப்பதாக இலங்கையில் உள்ள தகவலறிந்த தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
மெதுவாக இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடாக மாறி வருகிறது.
1956 க்குப் பின்னர் சிங்களப் பெரும்பான்மைவாதம் மேலும் வேரூன்றியது.
சர்வதேச மனித உரிமை அமைப்புகளை அரசாங்கம் ஒருபோதும் பொருட்படுத்தவில்லை.
நான்காம் ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் 40,000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியிருக்கிறது
இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பெருகிவரும் எதிர்ப்பு இன மற்றும் அரசியல் சார்புகளைக் கடந்து வேகமெடுத்து வருகிறது
தற்போதைய நெருக்கடியானது தமிழர்கள் சிங்களவர்களுடன் இணைந்து பொதுவான நிலைப்பாட்டை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.
எனவே தேசிய பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கிய குறைந்தபட்ச கோரிக்கை உட்பட்ட மாற்று அரசாங்கத்திற்காக அவர்கள் போராட வேண்டும்.
எந்த அரசாங்கமும், அனைத்து அதிகாரமுள்ள ராஜபக்ச சகோதரர்கள் கூட, மக்களின் பெருகிவரும் எதிர்ப்புக்கு எதிராக நிற்க முடியாது.
பிரெஞ்சுப் புரட்சியின் போது கூறியது போல், மக்களின் குரல் கடவுளின் குரல் என்ற அடிப்படையில் வரவிருக்கும் தேர்தலில், ராஜபக்ச அரசாங்கம், வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படும்.
இந்தியாவைப் பொறுத்த வரையில், அனைத்து அரசியல் கட்சிகளும், ஊடகக் குழுக்களும், தொழிற்சங்கங்களும், மாணவர் சங்கங்களும் ஒன்றிணைந்து போராடும் இலங்கை மக்களுக்கு அதன் ஒற்றுமையை வெளிப்படுத்துவது காலத்தின் தேவையாகும் என்று கட்டுரையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் இலங்கையிலிருந்து அகதிகளை சட்டவிரோதமாக குடியேறியவர்களாக இந்திய அரசாங்கம் தொடர்ந்து நடத்துமா? என்று கேள்வியெழுப்பியுள்ள கட்டுரையாளர், அகதிகள் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்கு பதிலாக இலங்கை அகதிகள் மீதான தனது அணுகுமுறையை இந்திய அரசாங்கம் மாற்றிக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும் என்றும் கோரியுள்ளார்
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் இருந்து வந்துள்ள அகதிகளுக்கு இணையான உரிமைகளும் சலுகைகளும் இலங்கை அகதிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.
அவர்களை நாடு கடத்தும் எந்தவொரு முயற்சியும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டை மீறுவதாகும்.
சர்வதேச மனிதாபிமான சட்டம், எந்த அகதியையும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக எந்த நாட்டிற்கும் திருப்பி அனுப்ப முடியாது என்று கூறுகிறது.
எனவே இலங்கை அகதிகள் இந்தியாவுக்கு வருவதைத் தடுப்பதற்குப் பதிலாக, இந்தியாவுக்கு அகதிகளாக வர விரும்புவோருக்கு இந்திய கடலோரக் காவல்படை உதவ வேண்டும்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ்; ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ள அகதிகள், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்தால், அவர்கள் இங்கு குடியுரிமை பெறும் அகதிகளாக கருதப்படுவார்கள் என்ற ஏற்பாடு இலங்கையில் இருந்து வரும் தமிழர்களுக்கும் ஏற்புடையதாக்கப்படவேண்டும் என்றும் கட்டுரையாளரான சென்னை பல்கலைகழகத்தின் தென், தென்கிழக்காசிய கற்கை நெறிகளுக்கான சிரேஸ்ட பேராசிரியர் வீ.சூரியநாராயன் கேட்டுள்ளார்
இறுதியாக இஸ்ரேலிய எழுத்தாளரான Schloime Ansky எழுதியது போல், பசியாலும் மரணத்தாலும் உந்தப்பட்டு, துன்பத்தாலும் வலியாலும், கடல் மற்றும் மலை மற்றும் சமவெளிகளில், "நாம் அனைவருமே அலைந்து திரிபவர்கள், நாங்கள் நிலத்திலிருந்து நிலத்திற்கு அலைந்து திரிகிறோம். நாங்கள் பூமியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்; என்ற கருத்தை சூரியநாராயன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
