இலங்கை அணியின் முன்னணி வீரர் அவுஸ்திரேலியாவில் குடியேறத் திட்டம்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஒருவர் அவுஸ்திரேலியாவில்(Australia) குடியேறத் திட்டமிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சிரேஸ்ட வீரர்களில் ஒருவரே இவ்வாறு அவுஸ்திரேலியாவின் மெல்பர்னில் குடியேறத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சகலதுறை ஆட்டக்காரர்
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் பின்னரே அவர் அவுஸ்திரேலியாவில் குடியேற உள்ளதாக கூறப்படுகின்றது.
டெஸ்ட், சர்வதேச ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகள் என்பவற்றில் இலங்கை தேசிய அணியின் தலைவராக கடமையாற்றிய வீரர் ஒருவரே இவ்வாறு குடியேற உள்ளதாகத் குறிப்பிடப்படுகின்றது.
இந்த நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரர் ஏற்கனவே மெல்பர்னில் சில வீடுகளை கொள்வனவு செய்துள்ள நிலையில் குடும்பத்துடன் குடியேறுவதற்கான ஆயத்தங்களை அவர் மேற்கொண்டுள்ளதாக குறித்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
