மலையகத்தில் தொடரும் மண்சரிவு அபாயம்
மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக வீதிகள் பாதிக்கப்பட்டு, போக்குவரத்து கேள்விக்குறியாக மாறியுள்ளது.
மலைகள் மற்றும் கிரவல் மண்திட்டுகள் மழையில் கரைந்து வீதிகள் மூடப்படுகின்றன.
இதனால் நுவரெலியா, வெலிமடை போன்ற இடங்களில் சில வீதிகள் தாழிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
மண்சரிவு அபாயம்
மேலும், கண்டி, கம்பளை, பூண்டுலோயா, நுவரெலியா, பதுளை வெலிமடை போன்ற இடங்களில் பரவலாக வீதிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

இருந்த போதிலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், போக்குவரத்தைச் சீர்செய்யும் வண்ணம் ஆங்காங்கே கனரக வாகனத்தின் துணைகொண்டு சீர்செய்து வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.
எனினும், தற்போது பெய்து வரும் மழை மேலும் பாதைகள் மற்றும் மக்களின் பயணங்களைப் பாதிப்படையச் செய்யும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.




நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri