இலங்கையின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
நாட்டின் பல மாவட்டங்களில் மண்சரிவு தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
இன்று ( 08.11.2026) மாலை 6 மணி முதல் நாளை (09.11.2026) மாலை 6 மணி வரை இந்த எச்சரிக்கைகள் நடைமுறையில் இருக்கும்.
கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை
பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகளைக் கவனித்து, பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.