நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 09 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு எச்சரிக்கை நாளை (29.11.2024) மாலை 04.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை
அதன்படி, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, கொழும்பு, கம்பஹா, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.





15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

படம் இல்லை ரூ. 100 கோடிக்கு மேலான செலவில் அட்லீ இயக்கும் விளம்பரம்... பிரம்மாண்டத்தின் உச்சம் Cineulagam
