தயாராக இருங்கள்! நாளை மாலை 4 மணிவரை வழங்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
நிலவும் மோசமான வானிலை காரணமாக, பல மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையானது இன்று (14.10.2026) மாலை 4 மணி முதல் நாளை (15.10.2026) மாலை 4 மணி வரையிலான 24 மணி நேர காலப்பகுதிக்குச் செல்லுபடியாகும்.
இதற்கமைய, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளுக்கு 'நிலை 2' (அம்பர்/எச்சரிக்கை) அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு
மேலும், ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு 'நிலை 1' (கண்காணிப்பு/விழிப்புணர்வு) அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

கனமழை காரணமாக ஏற்படக்கூடிய மண்சரிவு அபாயங்கள் குறித்து மலைப்பாங்கான மற்றும் சரிவான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், அவசரநிலை ஏற்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரத் தயாராக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.