மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
நாட்டில் தற்போது மழையுடனான காலநிலை நிலவி வருவதால் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி, குறித்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (05) மாலை 4.00 மணி முதல் நாளை (06) மாலை 4.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை
அந்தவகையில், கேகாலை மாவட்டத்தின் கேகாலை, தெஹியோவிட்ட, மாவனெல்ல, யட்டியாந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய, ருவன்வெல்ல, வரக்காபொல, தெரணியகல, அரநாயக்க, கலிகமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினக் குருவிட்ட, அஹேல் குருவிட்ட பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பதுளை, காலி, களுத்துறை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |